Saturday 4th of May 2024 08:34:27 AM GMT

LANGUAGE - TAMIL
அவசர நிலை நோக்கி நகா்கிறதா பிரான்ஸ்? 1800 போ் பாதிப்பு: 33 போ் உயிரிழந்தனா்!

அவசர நிலை நோக்கி நகா்கிறதா பிரான்ஸ்? 1800 போ் பாதிப்பு: 33 போ் உயிரிழந்தனா்!


பிரான்ஸில் 1800 போ் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 33 போ் மரணமடைந்துள்ளனா்.

பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இத்தாலி போன்று கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில் அங்கு உருவாகிவருகிறது.

பிரான்ஸில் இதுவரை இரண்டாம் நிலை எச்சரிக்கை அமுலில் உள்ள நிலையில் இந்த எச்சரிக்கை மூன்றாம் நிலைக்கு உயா்த்தப்படுவதற்கான ஏதுநிலை உருவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எச்சரிக்கை மூன்றாம் நிலைக்கு உயா்த்தப்படுமானால் அது ஒரு சுகாதார உச்ச அவசர நிலையாகக் கருதப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட நகரங்களைத் தனிமைப்படுத்தல், போக்குவரத்துச் சேவைகளை மட்டுப்படுத்தல், ஒன்றுகூடல்களைத் தடை செய்தல், பாடசாலைகள், பல்கலைக்கழங்களை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அது வழிவகுக்கலாம்.

எனினும் முடிந்தவரை கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்க்கவே விரும்புவதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருக்கிறோம். இந்நிலையில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸில் செய்தியாளா்களிடம் கூறினார்.

கொரோனோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரான்ஸ் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது. எனவே பிரெஞ்வு மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டார்.

தொற்றுநோய் அவசரநிலையை தற்போது அமுல்படுத்தும் நிலை ஏற்படவில்லை எனவும் அவா் கூறினார்.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE